Advertisement

BAN vs ENG, 2nd ODI: ஜேசன் ராய் அபார சதம்; வங்கதேசத்துக்கு 327 டார்கெட்!

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 327 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

Advertisement
England have posted a total of 326/7 in the second ODI !
England have posted a total of 326/7 in the second ODI ! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 03, 2023 • 03:44 PM

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 03, 2023 • 03:44 PM

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவிலுள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

Trending

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் - பிலீப் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சால்ட் 7 ரன்களிலும், டேவிட் மாலன் 11 ரன்னிலும், ஜேம்ஸ் வின்ஸ் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜேசன் ராய் தனது அரைசதத்தை கடந்தார். 

பின்னர் அவருடன் இணைந்த் கேப்டன் ஜோஸ் பட்லரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஜேசன் ராய் சதம் விளாச, ஜோஸ் பட்லரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 132 ரன்களைச் சேர்த்திருந்த ஜேசன் ராய் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வில் ஜேக்ஸ் ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த மொயீன் அலி, சாம் கரண ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் மொயின் அலி 42 ரன்களையும், சாம் கரண் 33 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும், மெஹிதி ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement