இந்திய அணியைப் போல மீண்டும் திரும்புவோம் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோதும் பிறகு மீண்டு வந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. அதுபோல இங்கிலாந்து அணியும் முதல் டெஸ்ட் தோல்வியிலிருந்து மீண்டு வந்து ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்லவேண்டும் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2020-21 டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என வென்று ஆச்சர்யப்படுத்தியது. பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோற்றது. எனினும் மீதமுள்ள 3 டெஸ்டுகளில் 2இல் வெற்றி பெற்று ஒரு டெஸ்டைப் போராடி டிரா செய்து நம்பமுடியாத வகையில் டெஸ்ட் தொடரை வென்றது.
இந்நிலையில் அதுபோல இங்கிலாந்து அணியும் முதல் டெஸ்ட் தோல்வியிலிருந்து மீண்டு வந்து ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்லவேண்டும் என இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் மீண்டு வந்து (ஆஸ்திரேலியாவுக்கு எதிரான) டெஸ்ட் தொடரை வென்றார்கள். எனவே இது நடக்க வாய்ப்புண்டு. நிலைமையை மாற்றி, பேட்டிங்கில் நாங்கள் செய்த தவறுகளைச் சரி செய்து, கடின உழைப்பைச் செலுத்தும் நேரமிது.
பிரிஸ்பேனில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. மீண்டும் இப்படித்தான் விளையாடுவோம் என ஊரில் நினைக்கலாம். ஆனால் இம்முறை முடிவுகள் வேறாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்குச் சமீபத்தில் வந்த அணிகளை விடவும் இங்கிலாந்து அணி மேலானது. ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்க முடியும் என்பதை அறிந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நாளை (டிசம்பர் 16) நடைபெறவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now