
England Names New 18-Member Squad For ODI Series Against Pakistan, Ben Stokes To Captain (Image Source: Google)
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களில் இலங்கை அணி விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்றும் ஒருநாள் தொடரை 2-0 என்றும் இங்கிலாந்து அணி வென்றது.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் ஆட்டத்துக்குப் பிறகு இங்கிலாந்து அணியினருக்கு வழக்கமான கரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் எதிர்பாராதவிதமாக மூன்று வீரர்கள் உள்பட ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து ஏழு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அணியில் இருந்த இதர இங்கிலாந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.