
England Pacer Mark Wood Doubtful For Third Test Against India (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி லீட்ஸில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதற்கிடையில் இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் தோள்பட்டையில் காயமடைந்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.