டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பாகிச்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் இரண்டாவது டி20 போட்டியைத் தவிர்த்து மற்ற இரண்டு போட்டிகளில் ஒரு பந்து கூட வீசப்படாமல் தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அந்தவகையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் சிறப்பான அடடத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் ஒரு இடம் முன்னேறி 7ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டிஸ் அணி வீரர் பிராண்டன் கிங் 5 இடங்கள் முன்னேறி 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மேற்கெண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 17 இடங்கள் முன்னேறி 20ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அவரைத்தொடர்ந்து இங்கிலாந்தின் பில் சால்ட் இரண்டாம் இடத்தையும், மூன்று மற்றும் நான்காம் இடங்களில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், பாபர் ஆசாம் ஆகியோரும் உள்ளனர். இதில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6ஆம் இடத்தில் தொடர்கிறார்.