
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனால் ஆஷஸ் தொடரை வெல்வதற்கு மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. அதுமட்டுமல்லாமல் பேஸ் பால் திட்டம் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சரிபட்டு வராது என்ற விமர்சனத்திற்கும் இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதனால் லீட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள 3ஆவது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதனிடையே ஆஸ்திரேலிய அணியின் நாதன் லயன் காயம் காரணமாக விலகியுள்ளதால், இங்கிலாந்து அணிக்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிதாக வரும் டாட் மர்ஃபியை இங்கிலாந்து அணி அட்டாக் மேல் அட்டாக் செய்ய வாய்ப்புகள் உள்ளது.