டி20 உலகக்கோப்பையும் இவங்களுக்கு தான் - அடித்துக்கூறும் மைக்கேல் வாகன்
டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்தப்படும் டி20 உலக கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
இந்நிலையில் இத்தொடரில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 அணிகளும் தான் டி20 உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு எந்த அணிக்கு உள்ளது என்பது குறித்து கருத்து தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“2015 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு பிறகு இங்கிலாந்து அணியை, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக ஆடக்கூடிய ஒரு வலுவான அணியாக கட்டமைத்தார் கேப்டன் ஈயன் மோர்கன். அதன் விளைவாக, 2019 உலக கோப்பையை ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றது.
அதைத்தொடர்ந்து தற்போது டி20 கிரிக்கெட்டிலும் சிறப்பாக இங்கிலாந்து அணி ஆடிவரும் நிலையில், டி20 உலக கோப்பையில் முழுமையான அணியாக களமிறங்குவதால், இங்கிலாந்து உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now