
England Suffer Ashes Blow As Pope Sidelined For Rest Of Series (Image Source: Google)
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளன. நடந்து முடிந்த 2 போட்டியில்லும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னைலையில் உள்ளது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. மீதமுள்ள டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. அதில் காயமடைந்த நாதன் லயன் மட்டும் இடம் பெறவில்லை இந்நிலையில் 3ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.
அதில் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியில் இடம் பிடித்த வீரர்கள் அப்படியே இடம் பிடித்தனர். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக எஞ்சியுள்ள டெஸ்ட் தொடர்களில் இருந்து அந்த அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் காயம் காரணமாக விலகி உள்ளார்.