-mdl.jpg)
England T20 World Cup 2022 squad: Buttler leads 15-man squad, Jason Roy out (Image Source: Google)
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று கருத்து தெரிவித்துவருகின்றனர்.
டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் பலம். அதேவேளையில், ரோஹித் சர்மா கேப்டன்சியில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழிகாட்டுதலில் வலுவான பென்ச் பலத்துடன், மிகச்சிறந்த அணியாக திகழும் இந்திய அணிக்கும் கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது.