
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி முதலில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடக்கிறது. முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. முதல் டி20 போட்டி சௌத்தாம்ப்டனில் இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. கரோனா காரணமாக டெஸ்ட் போட்டியில் ஆடாத கேப்டன் ரோஹித் சர்மா, டி20 தொடரில் ஆடுகிறார்.
ரோஹித் சர்மா தலைமையில் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். கோலி இந்த போட்டியில் ஆடாததால் தீபக் ஹூடா 3ஆம் வரிசையில் இறங்குவார்.
4ஆம் வரிசையில் சூர்யகுமார், 5ஆம் வரிசையில் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் 6ஆம்வரிசையில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஃபினிஷராக விளையாடுவார். ஸ்பின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.