இங்கிலாந்து vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லண்டனிலுள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இங்கிலாந்தை வீழ்த்தியது.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லண்டனிலுள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இந்தியா
- இடம் - லார்ட்ஸ் மைதானம், லண்டன்
- நேரம் - மாலை 5.30 மணி
போட்டி முன்னோட்டம்
இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. அதிலும் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் பந்துவீச்சில் அசத்தியுள்ள அணிக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
அதேபோல் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோரும் சிறப்பாக செய்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். அதேபோல் காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விலகிய விராட் கோலி, இப்போட்டியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் போட்டியில் படுமட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி படுதோல்வியைச் சந்தித்தது. அதிலும் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் என அனைவரும் ஒற்றை இலக்கை ரன்களிலும், சிலர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.
இதனால் இப்போட்டியில் ஃபார்முக்கு திரும்பவேண்டியது அவசியமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பந்துவீச்சாளர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியா கட்டாயத்தில் உள்ளனர்.
மேலும் இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் பண்மடங்கு அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 104
- இங்கிலாந்து - 43
- இந்தியா - 56
- டிரா - 2
- முடிவில்லை - 3
உத்தேச அணி
இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், லியாம் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கே), மொயின் அலி, சாம் கர்ரன், டேவிட் வில்லி, மாட் பார்கின்சன், ரீஸ் டாப்லி.
இந்தியா - ரோஹித் சர்மா (கே), ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர்/விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
ஃபேண்டஸி டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ஜானி பேர்ஸ்டோ, ரிஷப் பந்த்
- பேட்டர்ஸ் - ஷிகர் தவான், ரோஹித் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ஜோ ரூட்
- ஆல்ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, மொயீன் அலி
- பந்துவீச்சாளர்கள் - ஜஸ்ப்ரித் பும்ரா, ரீஸ் டாப்லி, யுஸ்வேந்திர் சஹால்
Win Big, Make Your Cricket Tales Now