
England will look to defend their crown as they qualify for their semifinals berth in Women's World (Image Source: Google)
நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய அந்த அணியில் சோஃபியா டாங்க்லி அரைசதம் அடித்து அசத்தினர்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சோஃபி டாங்க்லி 67 ரன்களையும், நடாலி ஸ்கைவர் 40 ரன்களையும் சேர்த்தனர்.