Advertisement

ஆஷஸ் தொடரை எளிதாக வெல்லலாம் என எண்ண வேண்டாம் - ஆஸியை எச்சரிக்கும் பென் ஸ்டோக்ஸ்!

ஆஷஸ் தொடரில் எங்களது அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்று தனது சமீபத்திய பேட்டி கூறியதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெளிப்படுத்திய அனைத்து முறையையும் சூசகமாக விமர்சித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

Bharathi Kannan
By Bharathi Kannan June 14, 2023 • 12:05 PM
England won't tone down 'Bazball' approach for Ashes series against Australia: Ben Stokes
England won't tone down 'Bazball' approach for Ashes series against Australia: Ben Stokes (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தி முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது. இதனைத்தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது.

வருகிற ஜூன் 16ஆம் தேதி துவங்கி மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த வருட ஆஷஸ் தொடரின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வென்ற பிறகு இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள வருகிறது. அதே நேரம் இங்கிலாந்து அணி கடந்த ஒன்றரை வருடங்களாக ஆக்ரோஷமான டெஸ்ட் கிரிக்கெட்டை வெளிப்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட் மீதான பார்வையை மொத்தமாக மாற்றி உள்ளது.

Trending


இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை பென் ஸ்டாக்ஸ் ஏற்றதில் இருந்து அணியின் தலைமை பெயிற்ச்சியாளர் உடன் சேர்ந்து பாகிஸ்தான் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல முன்னணி அணிகளை அவர்களது சொந்த மண்ணில் அனாயசமாக எதிக்கொண்டு எளிதாக வெற்றியையும் கண்டுள்ளனர்.

இதுவரை 14 போட்டிகளில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பேற்று விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 11 போட்டிகளில் வெற்றி மூன்று போட்டிகளில் தோல்வி என்கிற முறையில் சந்தித்துள்ளார். ஒருமுறை கூட தொடரை இழந்ததில்லை. மிகசிறந்த ரெக்கார்டை ஆஸி., அணிக்கு எதிராகவும் தொடர்வரா? இங்கிலாந்து அணியின் அதிரடியான அணுகுமுறை ஆஸ்திரேலிய அணியுடனும் தொடருமா? என பல்வேறு சந்தேகங்கள் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஆஷஸ் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பென் ஸ்டாக்ஸ் பதில் அளித்துள்ளார். அப்போது இதுபோன்ற கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த ஓராண்டிற்கும் மேலாக நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான அணுகுமுறையில் விளையாடி வருகிறோம். அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம். ஆகையால் ஆஷஸ் தொடரில் எங்களது அணுகுமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்னர் எதிர்கொண்ட அணிகளை எப்படி வேண்டுமானாலும் வென்றிருக்கலாம். சமீபத்தில் இங்கிலாந்தில் கூட கடினமின்றி வெற்றியை பெற்றார்கள். அப்படி ஆஷஸ் தொடரில் எதிர்பார்த்து வந்து விடாதீர்கள்.

எங்களது ஒரே நோக்கம் கிரிக்கெட் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதுதான். வெற்றி தோல்விக்குள் நாங்கள் செல்லவில்லை. அதெல்லாம் இறுதி முடிவுகள் நடுவில் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி மக்களை மகிழ்விக்க விரும்புகிறோம். அதுதான் எங்களது இறுதி நோக்கம். ஆஷஸ் தொடரிலும் அதைத்தான் செய்வோம்” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement