
England's 15-member squad for their tour of New Zealand in 2023! (Image Source: Google)
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்த நாட்டுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இங்கிலாந்து அணி, அடுத்ததாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.
இதையடுத்து அந்த அணி பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்த இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சுற்றுப்பயனத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்ட ஹாரி புரூக், ஜாக் கிரௌலி, பென் டக்கட் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான அறிமுக போட்டியில் சிறப்பாக பந்து வீசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அஹ்மது இந்த அணியில் இடம் பெறவில்லை.