
England's Ashes woes continue as Haseeb Hameed becomes their 50th duck in 2021 (Image Source: Google)
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேன், அடிலெய்டு ஆகிய மைதானங்களில் நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து படுதோல்வியடைந்தது.
இந்த நிலையில் பாக்ஸிங் டே டெஸ்ட் மெர்போர்னில் இன்று தொடங்கியது. இந்த டெஸ்டிலும் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் நான்கு மாற்றங்களுடன் இங்கிலாந்து களம் இறங்கியது. என்றாலும் பலன் அளிக்கவில்லை.
தொடக்க வீரர் ஹசீப் ஹமீத் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.