
England's biggest strength is consistency, says Morgan (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதிலிருந்தே தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் இங்கிலாந்து அணி கேப்டன் ஈயன் மோர்கன் ஐசிசிக்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இங்கிலாந்து அணியின் பலமே அணியின் நிலையான தன்மை தான் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மோர்கன்,“கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் செய்த நிலைத்தன்மையே எங்கள் அணியின் மிகப்பெரிய பலம் என்று நான் நினைக்கிறேன்.