
England's Jos Buttler Ruled Out Of Sri Lanka Series (Image Source: Google)
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்றுள்ள 2 டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி எளிதாக இலங்கை அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களினால் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர், தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அணியுடனான முதல் போட்டியில் ஜோஸ் பட்லர் அசவுகரியமாக உணர்ந்ததாக தெரிவித்தார். அதன்பின் அவர் தனது வீட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார்.