
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வரலாற்றுச் சிறப்புமிக்க டார்கெட்டை சேஸ் செய்து இந்தியாவை தோற்கடித்து தொடரை சமன் செய்தது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டை 2-2 என்ற கணக்கில் சமன் செய்து கோப்பையை பகிர்ந்து கொண்டது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணியின் இந்த வெற்றிக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஜோஸ் பட்லர் தனது வாழ்த்தை தெரிவித்தார். இங்கிலாந்து அணி அடுத்ததாக ஜூலை 7 முதல் இந்தியாவிற்கு எதிராக T20 தொடரில் விளையாட உள்ளது.
மார்ச் 2022இல் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து அனைத்து வடிவங்களிலும் வெற்றிப் பாதையில் உள்ளது. அதன் பிறகு, நெதர்லாந்திற்கு எதிராக விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.