
England's Playing XI For The Edgbaston Test! (Image Source: Google)
இந்திய அணி கடந்தாண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 5ஆவது போட்டி கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ரத்து செய்யப்பட்ட 5ஆவது டெஸ்ட் போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ள நிலையில், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில் இந்தியாவுடனான இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜானி பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், ஜோ ரூட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.