Advertisement

ENGW vs INDW, 2nd ODI: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.

Advertisement
ENGW vs INDW, 2nd ODI: India Have Clinched The ODI Series Against England in England
ENGW vs INDW, 2nd ODI: India Have Clinched The ODI Series Against England in England (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 22, 2022 • 10:25 AM

இங்கிலாந்தில் சுற்றுப்பயண் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 22, 2022 • 10:25 AM

இதில் இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் 62 ரன்கள் அடிக்கப்பட்டது.

Trending

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆட்டமிழக்காமல் 111 பந்துகளில் 18 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார். ஹர்லின் தியோல் 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 47 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. அதன்பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலிஸ் கேப்ஸி - டேனியல் வையட் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அலிஸ் கேப்ஸி 39 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் டேனியல் வையட் அரைசதம் கடந்து அசத்தினர். பின் 65 ரன்களில் வையட் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஏமி ஜோன்ஸும் 39 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவிசிய ரேனுகா சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement