
இங்கிலாந்து அணிக்கு எதிரான பிரிஸ்டல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் விளையாடி வருகிறது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்களை குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 231 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணிக்காக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷாபாலி வர்மா நல்ல தொடக்கத்தை கொடுத்தானர். இருவரும் அரை சதம் கடந்த அசத்தினர். இருப்பினும் அதற்கடுத்து இந்திய அணி அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. அதனால் இங்கிலாந்தை விட முதல் இன்னிங்ஸில் 165 ரன்கள் பின்தங்கியது இந்தியா.
இந்த பின்னடவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பிய இங்கிலாந்து அணி இந்தியாவை ஃபாலோ ஆன் செய்யுமாறு பணித்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய மகளிர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.