-mdl.jpg)
England Women vs New Zealand Women 2nd T20I Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கனக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வ்ருகிறது.
இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை கேன்டர்பரியில் நடைபெறவுள்ளவுள்ளது. ஏற்கெனவே நியூசிலாந்து மகளிர் அணி முதலிரண்டு போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளதால் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ENG-W vs NZ-W 3rd T20I: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
- இடம் - செயின்ட் லாரன்ஸ் மைதானம், கேன்டர்பரி
- நேரம் - ஜூலை 11, இரவு 11 மணி (இந்திய நேரப்படி)