
ENGW vs NZW: New Zealand Women won by 4 wkts (Image Source: Google)
நியூசிலாந்து மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனை டேனியல் வையட் அதிகபட்சமாக 35 ரன்களைச் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகள் சரிவர விளையாடததால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதன்பின் எளிய இலக்கை துரத்தில் நியூசிலாந்து மகளிர் அணியில் சூஸி பேட்ஸ், செட்டர்வைட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.