
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நேற்று முதல் தொடங்கியது. அதன்படி இரு அணிகாளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டெர்பியில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியூமண்ட் மற்றும் ஏமி ஜோன்ஸ் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாமி பியூமண்ட் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தையும், ஏமி ஜோன்ஸ் தனது முதல் சதத்தையும் பூர்த்தி செய்து மிரட்டினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 107 ரன்களில் டாமி பியூமண்டு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய எம்மா லம்பும் 2 ரன்னுடன் நடையைக் கட்டினார். பின்னர் 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 122 ரன்களை எடுத்திருண்ட ஏமி ஜோன்ஸும், 9 ரன்களில் சோபியா டங்க்லியும் என ஆட்டமிழந்தனர்.