
Cricket Image for Ind vs Eng: காயம் காரணமாக கேப்டன் விலகல், ரசிகர்கள் அதிர்ச்சி! (Eoin Morgan (Image Source: Google))
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் புனேவில்
நடைபெற்று வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி
66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை
நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இதற்கிடையில் பயிற்சியின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயான் மோர்கன்
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த
மருத்துவர்கள் அவரது கையில் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.