WI vs ENG: மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Eoin Morgan To Captain England T20I For West Indies Tour (Image Source: Google)
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஈயான் மோர்கன் தலைமை தாங்குகிறார்.
அதேசமயம் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் எந்த வீரரும் இந்த அணியில் சேர்க்கப்படவில்லை. மாற்றாக டேவிட் பெய்ன், ஜார்ஜ் கார்டன் ஆகிய அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி: ஈயான் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், லியாம் டாசன், ஜார்ஜ் கார்டன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டைமல் மில்ஸ், டேவிட் பெய்ன், ஆதில் ரஷித், ஜேசன் ராய், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜேம்ஸ் வின்ஸ்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News