
Eoin Morgan To Miss Remaining T20Is vs West Indies Due To Injury (Image Source: Google)
இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் ஜனவரி 23 முதல் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது. டெஸ்ட் தொடர், மார்ச் 8 முதல் மார்ச் 28 வரை நடைபெறுகிறது.
முதல் மூன்று போட்டிகளின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் காலில் காயம் ஏற்பட்டதால் 3ஆவது டி20 போட்டியில் விளையாடாத இங்கிலாந்து கேப்டன் ஈயன் மோர்கன், மீதமுள்ள இரு டி20 ஆட்டங்களில் இருந்தும் விலகியுள்ளார்.
மூன்றாவது டி20 போட்டியில் கேப்டனாக செயல்பட்டமொயீன் அலி, மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் கேப்டனாக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் விளையாடிய மொயீன் அலியை அந்த அணி தக்கவைத்துள்ளது.