Advertisement
Advertisement
Advertisement

விராட் கோலியிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - கவுதம் காம்பீர்!

சூர்யக்குமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் அழுத்தம் நிறைந்த இது போன்ற பெரிய போட்டிகளில் எப்படி விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என்பதை விராட் கோலியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Ex-India Star's Advice For Suryakumar Yadav, Rishabh Pant
Ex-India Star's Advice For Suryakumar Yadav, Rishabh Pant (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 05, 2022 • 09:45 PM

சமீப காலமாகவே இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளத்தின் மூலம் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய அவர் 35 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து ஆட்டம் இழந்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 05, 2022 • 09:45 PM

அதன் பின்னர் நடைபெற்று முடிந்த ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் 59 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியிலும் பாகிஸ்தானுக்கு எதிராக 44 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 60 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். அதேபோன்று இந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியல் இரண்டாவது இடத்தில் மூன்று போட்டிகளில் 77 ஆவரேஜுடன் 154 ரன்கள் விராட் கோலி குவித்துள்ளார்.

Trending

இந்நிலையில் இந்து தொடரில் விராட் கோலி விளையாடி வரும் விதம் குறித்து புகழ்ந்து பேசியுள்ள கவுதம் கம்பீர் இளம் வீரர்களை சற்று கண்டித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதன்படி நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் தோல்வி குறித்து பேசியிருந்த கம்பீர் கூறுகையில்,

"விராட் கோலியின் ஆட்டம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. ரோஹித் மற்றும் ராகுல் சிறப்பான துவக்கம் கொடுக்க அதன் பின்னர் அனைவருமே நன்றாக விளையாடினார்கள். கோலி பிரமாதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவரது இந்த ஆட்டத்திற்கு நாம் பாராட்டுகளை கொடுக்க வேண்டியது அவசியம். முதல் இரண்டு போட்டியிலும் பார்மிற்கு திரும்பியதை சுட்டிக்காட்டிய விராட் கோலி மூன்றாவது போட்டியில் அட்டகாசமாக விளையாடி உள்ளார்.

இதே பார்மை அவர் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவார் என நம்புகிறேன். மேலும் சூர்யக்குமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் அழுத்தம் நிறைந்த இது போன்ற பெரிய போட்டிகளில் எப்படி விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என்பதை விராட் கோலியை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் எப்போதும் உங்களால் பெரிய ஷாட்களை விளையாட முடியாது. விராட் கோலி ஒன்று இரண்டு ரன்கள் ஓடி பெறும் திறன் தான் அவரை பெரிய பிளேயராக இருக்க உதவுகிறது. அவர் ஒரு ரன்னுக்கான இடத்தில் இரண்டு ரன்களை கூட ஓடுவதில் ஆர்வம் காட்டுவார். இப்படி விளையாட கற்றுக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement