ஐசிசி தடைக்கு பிறகு மீண்டும் பயிற்சியாளராக களமிறங்கும் ஜெயசூர்யா!
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானான சனத் ஜெயசூர்யா மெல்போர்ன் கிளப் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானான சனத் ஜெயசூர்யா. இவர் தனது ஓய்வுக்கு பிறகு இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக பதவி வகித்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஐசிசியின் ஒழுங்கு நடத்தை விதிகளை ஜெயசூர்யா மீறியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டது.
Trending
இந்நிலையில், தனது தடை காலம் முடிந்த பிறகு எந்த ஒரு கிரிக்கெட் பொருப்பையும் வகிக்காமல் இருந்த ஜெயசூர்யா தற்போது மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது 51 வயதாகும் ஜெயசூர்யா இலங்கை அணிக்காக இதுவரை 110 டெஸ்ட், 445 ஒருநாள், 31 டி20 போட்டிகளில் விளையாடி 20 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், 500க்கும் அதிகமான விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now