என்னால் முடிந்ததை சிறப்பாக செய்வேன் - வெங்கடேஷ் ஐயர்!
மேலும் இந்திய அணி என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறோதோ ? அதை நான் நிச்சயம் பூர்த்தி செய்வேன் என்று வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடரானது வரும் 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சில வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக இரண்டாவது பாதியில் களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் முதன்முறையாக இந்திய அணியில் தேர்வாகியுள்ளார்.
Trending
இந்நிலையில் இந்திய அணியில் தேர்வானது குறித்து பேசிய வெங்கடேஷ் ஐயர், “உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. நம் நாட்டில் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிய வேண்டும் என்ற கனவு இருக்கும். எனக்கும் அப்படித்தான் இப்போது எனது கனவு நிஜமாகி உள்ளதில் மகிழ்ச்சி.
என்னை அணியில் தேர்வு செய்த தேர்வுக்குழுவினர், கேப்டன், பயிற்சியாளர் மற்றும் சீனியர் வீரர்கள் என அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன். மேலும் இந்திய அணி என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறோதோ ? அதை நான் நிச்சயம் பூர்த்தி செய்வேன். என்னால் முடிந்த சிறப்பான ஆட்டத்தை நான் இந்திய அணிக்காக வழங்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: T20 World Cup 2021
கொல்கத்தா அணிக்காக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் 10 போட்டிகளில் விளையாடி 370 ரன்களை குவித்தது மட்டுமின்றி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இடதுகை துவக்க வீரரான இவர் அதிரடியாக பேட்டிங் செய்வது மட்டுமின்றி தேவையான நேரத்தில் வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே தற்போது ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now