மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பாக். வீராங்கனைகள் இல்லாதது வருத்தமளிக்கிறது - உரூஜ் மும்தாஜ்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பாகிஸ்தான் வீராங்கனைகள் இடம்பெறாதது பற்றி அந்நாட்டு வீராங்கனை உரூஜ் மும்தாஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் வீராங்கனைகளுக்கான ஏலம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில், 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 87 பேர் ஏலத்தில் தேர்வானார்கள். டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. மொத்தம் 22 போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஐபிஎல் போட்டி போல டபிள்யூபிஎல் போட்டியிலும் பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு இடமில்லை. இதுகுறித்து பாகிஸ்தானின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான உரூஜ் மும்தாஜ் கூறுகையில், “மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பாகிஸ்தான் வீராங்கனைகள் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. எல்லா வாய்ப்புகளும் நியாயமாக இருக்க வேண்டும்.
Trending
எல்லா வாய்ப்புகளும் மகளிர் கிரிக்கெட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பதாக இருக்க வேண்டும். சம வாய்ப்புகள் இரு நாடுகளின் தரத்துக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கின்றன” என்று தெரிவித்துள்ளார். என்றார்.
அதேபோல் பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூஃப் கூறுகையில், “லீக் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அது துரதிர்ஷ்டவசமானது. லீக் போட்டிகளில் விளையாட எங்களுக்கும் ஆசை உண்டு. ஆனால் அது அப்படித்தான். அதை எங்களால் தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now