
சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்தாலும் தற்பொழுது ஐபிஎல் தொடர் மற்றும் தென் ஆபிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ டி20 போன்ற லீத் தொடர்களில் அதிரடியாகவும், ஆக்டிவாகவும் செயல்பட்டு வரும் தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், தென் ஆபிரிக்க அணிக்காக மூன்று விதமான தொடரிலும் அதிரடியாக செயல்பட்டு 11000+ குவித்துள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடர், சர்வதேச டி20 தொடர் என மொத்தம் 318 டி20 போட்டிகளில் பங்கேற்று 8,237 ரன்கள் குவித்து டி20 தொடரின் அதிரடி பேட்ஸ்மனாக பார்க்கப்படுகிறார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாகவும், எஸ்ஏ டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தென் ஆபிரிக்க வெர்ஷனான ஜெஹனன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், தன்னுடைய கிரிக்கெட் கரியரில் ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் வாயிலாக தெரியப்படுத்தி வரும் டூ பிளெசிஸ், தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் கரியரில் தன்னுடைய தூக்கத்தை கெடுத்த இரண்டு பந்துவீச்சாளர்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.