
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலின் மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு அந்த அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 17 ரன்கள் எடுத்த போது ரோவ்மன் பாவெலின் அசாத்தியமான கேட்ச்சால் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு தொடக்க வீரரான விராட் கோலியும் 33 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர் கேமரூன் க்ரீன் 27 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் அதிரடியாக விளையாடி ராஜத் பட்டிதார் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 34 ரன்களுக்கும், தினேஷ் கார்த்திக் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட மஹிபால் லாம்ரோரும் 32 ரன்கள் எடுத்த நிலைடில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஸ்வப்நில் சிங், கரண் சர்மா ஆகியோர் ஒருசில் பவுண்டரிகளை அடிக்க ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது.