ஐபிஎல் 2023: இந்தப் போட்டியில் தோல்வியடைந்தது ஏமாற்றத்தையே அளிக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
ஸ்டொய்னிஸ் மற்றும் பூரன் இருவரும் ஹர்ஷலை டார்கெட் செய்தது பெங்களூரு அணிக்கு முக்கிய பின்னடைவாக மாறியதாக ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
16வது சீசனுக்கான 15வது லீக் போட்டியில் டூ பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது. ஆர்சிபி அணியில் விராட் கோலி, டூ பிளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதனைத் தொடர்ந்து லக்னோ அணி கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து த்ரில் வெற்றியை பதிவு செய்தது. லக்னோ அணியில் நிக்கோலஸ் பூரன் 19 பந்துகளில் 62 ரன்களும், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 30 பந்துகளில் 65 ரன்களும் சேர்த்து அசத்தினர். கேஎல் ராகுல் 20 பந்துகளில் 18 ரன்கள் விளாசியும் லக்னோ அணி அபார வெற்றியை பதிவு செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆட்டநாயகனாக நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டார்.
Trending
இந்த தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ், “212 ரன்கள் குவித்தும் இந்தப் போட்டியில் தோல்வியடைந்தது ஏமாற்றத்தையே அளிக்கிறது. மிடில் ஓவர்களில் லக்னோ அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள். கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டும் என்ற நிலை வந்த போது, ரன் அவுட் செய்வதற்காக தயாராக இருந்தோம். ஆனால் சரியாக அதனை செய்ய முடியவில்லை.
நாங்கள் பேட்டிங் செய்யும் போது 7 முதல் 14 ஓவர்கள் வரை பிட்ச் ஸ்லோவாக இருந்தது. ஆனால் கடைசி 5 ஓவர்கள் சிறந்த விக்கெட்டாக இருந்தது. லக்னோ அணியின் ஸ்டாய்னிஸ் மற்றும் பூரன் இருவரும் மிடில் பேட்டில் அடித்தார்கள்.வ்அதேபோல் பெங்களூரு அணியின் முக்கிய பந்துவீச்சாளரான ஹர்சல் படேலை அவர்கள் விளாசியது பின்னடைவாக மாறியது.
அதேபோல் டெத் ஓவர்களில் சிறப்பாக வீசுவது அவ்வளவு எளிதல்ல. எனது பேட்டிங்கை பொருத்தவரை, எனக்கு டைமிங் சரியாக அமையவில்லை. ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில் பந்து சரியாக பேட்டில் படவில்லை. ஆனால் சில பந்துகளை மிடில் பேட்டில் அடித்த பின், எனது ஆட்டத்தை மீட்டெடுத்தேன்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now