
Faheem Ashraf gets chances despite constant failures but Usman Qadir is not getting his opportunity (Image Source: Google)
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் படுமோசமாக தோற்று தொடரை இழந்தது. 2 போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது.
அதிலும் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அனுபவமற்ற வீரர்களை கொண்ட அணியிடமே பாகிஸ்தான் இத்தோல்விகளைச் சந்தித்துள்ளத். அனுபவமற்ற இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அடைந்த படுதோல்வி, அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்சமாம் உல் ஹக், அக்தர் ஆகியோர் பாக்., அணியை விமர்சித்திருந்தனர்.
பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துவரும் நிலையில், அந்த அணியின் நியாயமற்ற செயல்பாட்டை சல்மான் பட்டும் விமர்சித்துள்ளார்.