
Fakhar, Sarfaraz, Haider included in Pakistan's 15 for T20 WC (Image Source: Google)
ஏழாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடரானது வருகிற 17ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகளில் மாற்றம் செய்ய நாளை கடைசி நாளாகும். அதன்படி டி20 உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே அணியில் இடம் பெற்ற பேட்ஸ்மேன்கள் குஷ்தில் ஷா, துணை விக்கெட் கீப்பர் அசம் கான், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்சைன் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஹைதர் அலி, சர்பராஸ் அகமது, ஃபகர் ஸமான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.