
Family, friends and former cricketers farewell 'Superman' Shane Warne in private funeral in Melbourn (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான வார்னே தனது 52ஆவது வயதில் மார்ச் மாதம் 4ஆம் தேதி காலமானார். வார்னேவின் மறைவு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
தாய்லாந்தில் நண்பர்களுடன் இன்ப சுற்றுலா சென்ற போது இந்த மரணம் நிகழ்ந்தது. வார்னேவின் இறப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
வார்னேவின் பிரேத பரிசோதனை முடிவில் அவர் இறப்பு இயற்கையானது தான் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், வார்னேவின் உடல் தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டது.