
Fans Celebrate MS Dhoni's Birthday With 41-Foot High Cutout, 41 Kg Cake (Image Source: Google)
தோனியின் 41ஆவது பிறந்தநாள் இன்று. 2004ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி, 2019ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடி 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 போட்டிகளில் ஆடி 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.
இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுகொடுத்தவர் தோனி. இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு செய்து கிரிக்கெட் ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக திகழ்பவர் தோனி.
கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தோனி. சினிமா நடிகர்களைவிட ஒரு படி அதிகமாக கொண்டாடப்படுபவர் தோனி. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, ஐபிஎல்லில் மட்டும் ஆடிவருகிறார்.