இந்திய அணியில் மீண்டும் பறிபோன சஞ்சு சாம்சனின் வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள சம்பவம், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த 27 வயதான கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன். 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இதுவரை மொத்தம் 13 டி20 போட்டியிலும், ஒரே ஒரு நாள் போட்டியிலும் மட்டுமே விளையாடியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆடும் வீரர். திறமையான விக்கெட் கீப்பர், ஆட்டத்தை தனியாளாக மாற்றும் திறன் என பல திறமைகள் இருந்தும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. நடப்பு ஐபிஎல் சீசனில் 14 போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன், 374 ரன்களை அடித்துள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பு இல்லை.
Trending
அதே சமயம், 12 போட்டியில் நடப்பு சீசனில் விளையாடி 182 ரன்களும், விக்கெட்டே எடுக்காத வெங்கடேஷ் ஐயருக்கு மட்டும் இந்திய டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் ஏன் இந்த பாகுபாட்டை பிசிசிஐ காட்டுவதாக ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா தான், ஆஸ்திரேலிய மைதானங்களில் சஞ்சு சாம்சன் போல் ஷாட்கள் ஆடும் வீரர்கள் தேவை என்றும், அவருக்கு ஆதரவு தருவோம் என்று கூறினார்.
ஆனால் இலங்கைக்கு எதிராக 2 போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கிவிட்டு தற்போது அணியிலிருந்து தூக்குவதை என்னவென்று சொல்வது? இந்திய அணிக்கு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ள பெட்டர்னை பார்த்தால், இப்படி ஒரு அதிர்ஷ்டம் தான் சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது என தெளிவாக தெரியும். தனது 20வது வயதில் 2015ஆம் ஆணடு முதல் முறையாக இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதன் பின்பு, 2020ஆம் ஆண்டு தான் (ஜனவரி மாதம்) சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதன் பின்னர் அடுத்த மாதம் 2 போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு 2020ஆம் ஆண்டு (டிசம்பர்) 10 மாதம் கழித்து தான் இந்திய அணியில் 3 டி20 போட்டியில் விளையாட சாம்சனுக்கு இடம் கிடைத்தது. அதன் பிறகு 2021 ஜூலையில் 3 போட்டியும், 2022 பிப்ரவரியில் 2 போட்டியில் மட்டுமே விளையாட வாய்பபு கிடைத்தது. தற்போது மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் சஞ்சு சாம்சன்.
Win Big, Make Your Cricket Tales Now