தேசிய கீதம் இசைக்கும் போது சுவிங்கம் மென்ற விராட் கோலி - ரசிகர்கள் கொந்தளிப்பு!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியின்போது தேசிய கீதம் இசைத்தபோது, சுயிங்கம் மென்று கொண்டிருந்த விராட் கோலி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்தியா தொடரை இழந்து விட்டது.
இத்தொடரின் 3ஆவது மற்றும் கடைசி போட்டி கேப் டவுனில் தற்போது நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். இரு நாட்டின் தேசிய கீதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இசைக்கப்படும்.
அப்போது அந்தந்த நாட்டு வீரர்கள் தங்கள் மனதிற்குள் தேசிய கீதத்தை இசைப்பார்கள். தேசிய கீதம் இசைக்கும்போது பார்வையை சிதற விடமாட்டார்கள்.
ஆனால் இன்று இந்திய தேசிய கீதம் இசைக்கப்படும்போது, விராட் கோலி சாதாரணமாக சுயிங்கம் மென்று கொண்டு வாயை அசைத்துக் கொண்டிருந்தார். இந்த காட்சி காணொளியாக பதிவாகியுள்ளது.
Virat Kohli busy chewing something while National Anthem is playing. Ambassador of the nation.@BCCI pic.twitter.com/FiOA9roEkv
— Vaayumaindan (@bystanderever) January 23, 2022
இதை டுவிட்டரில் பரவவிட்ட ரசிகர்கள் விராட் கோலியை விமர்சனம் செய்து வருகிறார்கள். முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த விராட் கோலி, 2-வது போட்டியில் டக்அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now