டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் மிட்செல் ஸ்டார்க்!
அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுடன் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது.
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற்றவுள்ளது. மேலும் இத்தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.
இத்தொடருக்காக அனைத்து கிரிக்கெட் அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. அதற்கேற்றார் போல் ஆஸ்திரேலிய அணியும் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய அணிகளுடன் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
Trending
இந்நிலையில், இத்தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், இத்தொடரின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகலாம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஸ்டார்க்,“கடந்த சில ஆண்டுகளில் வெறும் 10 டி20 போட்டிகளில் கூட விளையாடவில்லை. ஆனால் இந்த சில வாரங்களில் 10 போட்டிகளில் விளையாடவுள்ளேம். இதன்மூலம் வரவுள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராக முடியும்.
இந்த தொடரின் மூலம் பந்துவீச்சில் இருக்கும் பிரச்னையை எளிதில் எங்களால் சரிசெய்ய முடியும். அதனால் இத்தொடர் எங்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும்” என ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now