சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய முகமது ரிஸ்வான்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் படைத்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த அதிரடி வீரர்களில் ஒருவர் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான். ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் 825 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார் .
அண்மையில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்காக தனியொரு வீரராக அபாரமாக விளையாடி அந்த அணியை ஃபைனல் வரை அழைத்துச்சென்றார் ரிஸ்வான். ஆசிய கோப்பையில் 281 ரன்களை குவித்த வீரராக ஆசிய கோப்பையை முடித்தார்.
Trending
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 68 ரன்களை குவித்த ரிஸ்வான் டி20 கிரிக்கெட்டில் ஒரு சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் டி20 போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 46 பந்தில் ரிஸ்வான் 68 ரன்கள் அடித்தார்.
இந்த போட்டியில் 68 ரன்கள் அடித்ததன் மூலம், ரிஸ்வான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். மேலும் 52 டி20 இன்னிங்ஸில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் ரிஸ்வான்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை விரைவில் எட்டிய வீரர் என்ற சாதனையை பாபர் அசாமுடன் பகிர்ந்துள்ளார். பாபர் அசாமும் 52 இன்னிங்ஸ்களில் தான் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
அவர்களைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 56 டி20 இன்னிங்ஸ்களிலும், கேஎல் ராகுல் 58 இன்னிங்ஸ்களிலும் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினர். அவர்களின் சாதனையை முகமது ரிஸ்வான் முறியடித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now