
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் 2-0 என்ற தலைப்பில் முன்னிலை வகித்த நிலையில், அந்த அணியானது நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தோல்வியை சந்தித்ததன் மூலம் இந்த தொடரில் தங்களது முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.
அதோடு தற்போது இந்த தொடரானது இரண்டுக்கு ஒன்று 2-1 என்ற கணக்கில் இருக்கிறது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்தது.
பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 எங்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 83 ரன்களை குவித்து அசத்தினார்.