பேட்டிங்கில் நாங்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் - ஐடன் மார்க்ரம்!
இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் நாங்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இந்த தொடரில் பல நல்ல விஷயங்கள் எங்கள் அணிக்கு கிடைத்திருக்கிறது என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தற்பொழுது 3 கேப்டன்களின் கீழ், 3 வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய இளம் அணி சந்தித்தது.
இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட, இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக புதிய கேப்டன் எய்டன் மார்க்ரம்முக்கு டி20 தொடரை வெல்லுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு அமைந்தது. இந்த நிலையில் இன்று தொடரின் மூன்றாவது போட்டியில் நடைபெற்றது.
Trending
மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக டாஸ் அவர்கள் பக்கமே சென்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய, இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 41 பந்தில் 60 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் சூரியகுமார் யாதவ் முதல் 25 பந்தில் 27 ரன்கள் எடுத்து, அதற்கு அடுத்த 31 பந்துகளில், அதிரடியாக 73 ரன்கள் குவித்து, இந்திய அணி 20 அவர்கள் முடிவில் 21 ரன்கள் எடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணி ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் சுழல் பந்துவீச்சில் சிக்கி 95 ரன்களுக்கு சுருண்டு 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இந்நிலையில், தோல்விக்கு பின் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம், “200 ரன்களை சேசிங் செய்யப் போகிறோம் என்று நினைத்தபோது நான் ஒன்னும் சோகமாக இல்லை. ஏனென்றால் இந்த இலக்கை வெற்றிகரமாக துரத்த முடியும் என்றுதான் நான் நினைத்தேன். நிச்சயமாக இது துரத்தக்கூடிய இலக்கு தான். நாங்கள் பில்டிங் செய்யும் போது பேட்டர்கள் அனைத்து திசையிலும் அடிக்கலாம் என்பது போல் தான் இருந்தது.
எனினும் இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் நாங்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இந்த தொடரில் பல நல்ல விஷயங்கள் எங்கள் அணிக்கு கிடைத்திருக்கிறது. இதனை வைத்து நாங்கள் முன்னோக்கி செல்வோம் என்று நம்புகிறேன். சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் சில விஷயங்களை நாங்கள் கவனம் செலுத்தி அதனை மாற்ற முயற்சிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now