
FIFA World Cup: Vinesh Phogat, Tendulkar, Yuvraj, And Chhetri Hail Messi, Argentina For Their Triump (Image Source: Google)
கத்தாரில் கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெரிய கோஷங்களுடன் மகுடத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா அணி.
நொடிக்கு நொடி பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா.
இந்த போட்டியில் அர்ஜெண்டினா கோப்பை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்ததை விட, எப்படியாவது லியோனல் மெஸ்ஸி வென்றுவிட வேண்டும் என்று தான் கடும் பிரார்த்தனையில் இருந்தனர். இதற்கு காரணம் மெஸ்ஸி விளையாடும் கடைசி உலகக்கோப்பை தொடராக இது இருந்திருப்பது தான். இதனை அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.