
Fifties From Chandimal & Oshada Put Sri Lanka On Track To 400 In 2nd Test Against Pakistan (Image Source: Google)
பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாதா ஃபெர்னாண்டோ, கருணரத்னே ஆகியோர் இறங்கினர். இதில் பொறுப்புடன் விளையாடிய ஃபெர்னாண்டோ அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் 3 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கேப்டன் கருணரத்னே 40 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.