
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் பாகிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சாளர்களையும் வைத்து வதம் செய்து விட்டார். தொடக்க வீரராகக் களம் கண்ட அவர் 26 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்து, 48 பந்துகளில் சதத்தை பதிவு செய்தார்.
அத்தோடு நிற்காமல் மேற்கொண்டு 14 பந்துகளை சந்தித்து, மொத்தமாக 62 பந்துகளில் 137 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் அவர் மொத்தமாக 5 பவுண்டரிகள் மட்டுமே அடித்து, இன்னொரு பக்கமாக 16 சிக்ஸர்கள் நொறுக்கி, நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றைய நாளை மிகவும் மகிழ்ச்சியான நாளாக மாற்றி இருக்கிறார்.
அவரின் இந்த இன்னிங்ஸ் மூலம் குறிப்பிட்ட இரண்டு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். இதற்கு முன்பு வங்கதேச அணிக்காக முன்னாள் நியூசிலாந்து கேப்டன் மெக்கலம் 128 ரன்கள் அடித்ததே, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்பொழுது இதை முறியடித்து நியூசிலாந்து சாதனை படைத்திருக்கிறார்.