
Birmingham Test: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் ஆகியோர் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் கேல் ராகுல் 2 ரன்னிலும், கருண் நயர் 31 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஆனாலும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்திருந்தது. இதையாடுத்து நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஷுப்மன் கில் 114 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 41 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஷுப்மன் கில் இரட்டை சதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் சதத்தை நெருங்கிய ரவீந்திர ஜடேஜா 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.