
பாகிஸ்தான் அணிக்கு எதிராக கொழும்பு நகரில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட 50 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக டாப் 4 பேட்ஸ்மேன்களும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பின்னர் 357 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக 94 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என இறுதிவரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் அடித்ததன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், “நான் இந்த நேர்காணலை விரைவாக முடித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் அணிக்கு பங்களிப்பை வழங்க நான் தயாராக வேண்டும். இந்த போட்டியில் கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக விளையாடினார். அவர் அதிரடியாக விளையாடியதால் நான் ஸ்ட்ரைக் ரொட்டேட் மட்டுமே செய்ய நினைத்தேன். இந்த போட்டியில் நாங்கள் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் செய்ததால் எளிதாக ரன்கள் கிடைத்தன.