
Foakes returns, England announces Playing XI for first Test against South Africa (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடர் 1-1 என சமனடைந்த நிலையில், டி20 தொடரை 2-1 என தென் ஆப்பிரிக்க அணி வென்றது.
ஜூலை 31ஆம் தேதியுடன் டி20 தொடர் முடிந்துவிட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸில் தொடங்குகிறது. டி20 தொடர் முடிந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.
முதல் டெஸ்ட் போட்டிக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான டெஸ்ட் அணியில், ஜாக் கிரௌலி, அலெக்ஸ் லீஸ், ஒல்லி போப், ஜோரு ரூட், ஜானி பேர்ஸ்டோவ், ஃபோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் என வழக்கமான டெஸ்ட் வீரர்களே இடம்பெற்றுள்ளனர்.